உலக பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் 32,500 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை விற்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
உலக பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய சொந்த நிறுவனமான டெஸ்லாவின் 32,500 கோடி மதிப்பு கொண்ட பங்குகளை விற்றுவிட்டு அதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்த பணத்தை திரட்டியதாக ஆவணங்கள் தெரிவிக்கிறது. மேலும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அவர், மின்சார வாகன நிறுவனத்தில் ஏறக்குறைய $4 பில்லியன் மதிப்பு கொண்ட பங்குகளை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எலான் மஸ்கின் நிறுவனமான டெஸ்லாவின் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் நிலை முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் சொத்து மதிப்பானது, தற்போது 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.