டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. இந்நிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய தயாராக உள்ளது.
நியூசிலாந்து :
கேன் வில்லியம்சன் (கே), ஃபின் ஆலன், டெவோன் கான்வே, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், டிரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன், இஷ் சோதி, டிம் சவுத்தி.
பாகிஸ்தான் :
பாபர் அசாம் (கே), ஷான் மசூத், ஷதாப் கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், ஹாரிஸ் ரவுஃப், முகமது வாசிம், நசீம் ஷா, எஸ்.அஃப்ரிடி
Batting first against @TheRealPCB at the @scg after a toss win for Kane Williamson. Follow play LIVE in NZ with @skysportnz and @SENZ_Radio. LIVE scoring | https://t.co/RsU9xij4PO #T20WorldCup pic.twitter.com/z3zxdG8HMK
— BLACKCAPS (@BLACKCAPS) November 9, 2022
Unchanged playing XI 👇#WeHaveWeWill | #T20WorldCup | #NZvPAK pic.twitter.com/5569b0FqoD
— Pakistan Cricket (@TheRealPCB) November 9, 2022