Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி…. மாநில அரசு அதிரடி….!!!!

செப்டம்பர் மாதம் மத்திய அரசானது லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அதிகரித்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. அதாவது பல்வேறு மாநில அரசுகள் ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரித்து வருகிறது. மத்திய அரசை அடுத்து பீகார், ஜார்கண்ட், பஞ்சாப், இமாச்சலபிரதேசம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு, ஊழியர்களின் அகவிலைபப்டியை 38% ஆக அதிகரித்து நேற்று அறிவிப்பை வெளியிட்டது.

இதுகுறித்து நிதித் துறை செயலர் பிறப்பித்த உத்தரவில், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி முழுநேரமாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனிடையில் அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. புது அகவிலைப்படி ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும். அத்துடன் ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வுக்கான தவணைத்தொகை 2 தவணைகளில் ரொக்கமாக வழங்கப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் தவணை நிலுவைத்தொகை நவம்பர் கடைசி வாரத்திலும், 2வது தவணை டிசம்பர் மாதத்திலும் வழங்கப்படும்.

ஓய்வூதியம் பெறுவோரின் அகவிலைப்படியும் 4% உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலுவைத்தொகையும் 2 தவணைகளில் தொகையாக வழங்கப்படும். முன்பாக மத்திய அரசுடன் பல்வேறு மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. மத்திய மற்றும் பல மாநில அரசுகளின் இம்முடிவால் கோடிக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். ஆகவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்ததாக 2023 ஜனவரியில் அகவிலைப்படி உயர்த்தப்படும்.

எனினும் இதற்கான அறிவிப்பு மார்ச் 2023ல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள 18 மாத அகவிலைப்படி பாக்கிகள் கிடைக்க வாய்ப்பு இருப்தாகவும் தகவல் தெரிவிக்கிறது. நீண்டநாட்களாகவே அகவிலைப்படி நிலுவைத்தொகையை அரசாங்கம் தங்களுக்கு வழங்க வேண்டும் எனும் கோரிக்கை அரசு ஊழியர்கள் மத்தியில் வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |