Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் போய் பாருங்க…! பக்கத்து பக்கத்துல புதைச்ச வரலாறு இருக்கு.. மெர்சலாகி பேசிய ஆ.ராசா ..!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, இந்தி வந்தால் ஏன் எதிர்க்கிறோம் என்றால் ? எதற்காக எதிர்க்கிறோம் ?  உங்கள் பண்பாடு வேறு,  எங்கள் பண்பாடு வேறு. உங்கள் மொழி வேறு,  எங்கள் மொழி வேறு. எங்கள் மொழி எது ? எல்லோரும் படிக்க வேண்டும் என்று சொல்வது என்னுடைய மொழி. அறிவு எல்லோருக்கும் வேண்டும் என்று சொல்கின்ற மொழி என் மொழி.

எல்லோரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று சொல்வது என் மொழி. ஆனால் எங்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு, எங்களுக்கு மட்டும் தான் கல்வி, நாங்கள் மட்டும் தான் உயர்ந்தவர்கள் என்று சொல்வது சமஸ்கிருதமும் – இந்தியும்.

1939-இல் ஆதிதிராவிடரை, ஒரு நாடாரை, ஒரு செட்டியார் தூக்கிக்கொண்டு போவதற்கு என்ன காரணம் ? ஜாதியாக இருந்தால் பிரிந்திருப்பார்கள், மொழியால் ஒன்று சேர்ந்தார்கள். மொழி ஒன்று சேர்ப்பது மட்டுமல்ல இல்ல, எல்லா சுடுகாடும் தனித்தனியாக இருக்கிறது,  சென்னையில் போய் பாருங்கள்.. தாளமுத்து, நடராஜன் ஒரு ஆதிதிராவிடன், ஒரு நாடார். பக்கத்து பக்கத்தில் புதைத்த வரலாறு 1939இல் இந்த தமிழ்நாடு தான் என பேசினார்.

Categories

Tech |