இலவசரேஷன் விநியோகம் செய்யும் காலத்தினை டிசம்பர் மாதம் வரையிலும் அரசு நீட்டித்திருக்கிறது. மற்றொருபுறம் மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டமானது நாடு முழுதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆப் சேல் சாதனம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில் அரசின் இம்முடிவின் விளைவும் தற்போது தெரிகிறது என்பது மிக முக்கியமான விஷயம் ஆகும்.
அதாவது, உண்மையில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் அடிப்படையில் ரேஷன் கடைகளில் மின்னணு பாயின்ட் ஆப் சேல் கருவிகளை மின்னணு தராசில் இணைக்க மத்திய அரசானது உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்போது நாட்டிலுள்ள அனைத்து ரேஷன்கடைகளும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆப் சேல் அதாவது பிஓஎஸ் சாதனங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த செயல்முறையால் ரேஷன் எடையில் இனிமேல் எந்தவித குளறுபடியும் நடைபெறாது. பொதுவிநியோகத் திட்டத்தின் பயனாளிகள் எச்சூழ்நிலையிலும் குறைவான ரேஷன் பெறக் கூடாது என்பதற்காக ரேஷன் டீலர்களுக்கு ஹைப்ரிட் மாடல் விற்பனைப் புள்ளி இயந்திரங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயந்திரங்கள் ஆன்லைன் பயன் முறையிலும், நெட்வொர்க் இல்லாவிட்டால் ஆப்லைனிலும் இயங்கும். ஆகவே இனிமேல் பயனாளி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையிலிருந்தும் தன் டிஜிட்டல் ரேஷன் அட்டை பயன்படுத்தி வாங்கலாம்.