திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து நீதிபதிகள் வேதனையையும், கேள்வியையும் எழுப்பி இருக்கின்றார்கள்.
குறிப்பாக கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடை அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷாக்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.