Categories
சினிமா தமிழ் சினிமா

“கதாநாயகன் ரொம்ப முக்கியம்”….. அப்படிப்பட்ட ஹீரோ கூட மட்டும் தான் சேர்ந்து நடிப்பேன்…. பிரபல நடிகை ஸ்பீச்….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூனம் பாஜ்வா‌. இவர் தற்போது குருமூர்த்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்க, ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவி மரியா, ரேகா சுரேஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தை கே.பி தனசேகரன் இயக்க, பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் சிவசலபதி சாய்சரவணன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் குருமூர்த்தி படத்தின் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது நடிகை பூனம் பாஜ்வா விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு படத்தில் தமிழரசி என்ற அருமையான ஒரு கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார்கள். நான் படத்தில் நட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளேன். இவரைப் போன்ற நல்ல நடிகர்களுடன் நடிப்பதற்கு எதிர்காலத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும் அந்த அளவுக்கு அவர் பழகுவதற்கும் நடிப்பதற்கும் மிகச் சிறந்த மனிதர் என்று கூறினார்.

Categories

Tech |