Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விக்ரமுக்கு கிடைத்த கௌரவம்…. வழங்கி சிறப்பித்த பிரபல நடிகை….. வைரலாகும் புகைப்படம்….!!!!!

இந்தியாவைச் சேர்ந்த திரையுலக பிரபலங்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தால் கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்படும். இந்த கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் 10 வருடத்திற்கு விசா இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகம் செல்லலாம். இந்த கோல்டன் விசாவானது பல்வேறு பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய் தத், ஊர்வசி ரவுதாலா, மம்மூட்டி, மோகன்லால், பிரித்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், பாவனா, மீனா, கமல்ஹாசன், வெங்கட் பிரபு, சரத்குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பல வருடங்களாக திரை துறையில் முன்னணி ஹீரோவாக ஜொலிக்கும் நடிகர் விக்ரமுக்கு தற்போது ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது‌. இந்த கோல்டன் விசாவை ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் நடிகை பூர்ணா மற்றும் அவருடைய கணவர் ஷானித் ஆசிப் அலி ஆகியோர் வழங்கினர். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை நடிகை பூர்ணா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |