உலகம் முழுவதும் ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரே செயலி கூகுள் பிளே ஸ்டோர் தான். இதன் உள்ளே இருக்கும் உங்களுக்கு தேவையான பல வகையான செயல்கள் உள்ளன. இதில் உள்ள அனைத்தும் உண்மையான பாதுகாப்பான செயலிகள் அல்ல, இவற்றில் பல ஆபத்துக்கள் நிறைந்த செயல்களும் உள்ளன. இதில் நீங்கள் டவுன்லோட் செய்யும் செயலிகள் சில ஆபத்தான அல்லது உங்களின் தனிப்பட்ட டேட்டா போன்றவற்றை திருடிவிடும்.
இந்நிலையில் ஆண்ட்ராய்டு போன்களில் வைரஸ் உடன் இருக்கும் அப்ளிகேஷன்களின் பட்டியலை சைபர் செக்யூரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் ஃபோனில்- Bluetooth auto connect, Bluetooth app sender, driver: Bluetooth, USB, Wi-Fi, mobile transfer: smart switch ஆகிய அப்ளிகேஷன்கள் இருந்தால் அதனை உடனே அன் இன்ஸ்டால் செய்து விடுங்கள்.