டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன..
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (புதன்கிழமை) சிட்னி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. நியூசிலாந்து 5 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் ஒரு வாஷ் அவுட் மூலம் 7 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது..
கடைசியாக ஆடிய கிவி (நியூசிலாந்து) அணி 185 ரன்கள் குவித்து அயர்லாந்துக்கு எதிராக 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. க்ளென் பிலிப்ஸ், பின் ஆலன், டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் போன்றவர்கள் அவர்களுக்கு சிறந்த செயல்திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். மேலும் கேப்டன் கேன் வில்லியம்சனும் கடைசி போட்டியில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்திருந்தார். அவரும் நல்ல பார்மில் இருக்கிறார்.
மறுபுறம், பாகிஸ்தான் தொடக்கத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளிடம் தொடர்ச்சியாகதோற்றபின் மீண்டும் வலுவாக திரும்பி மூன்று தொடர்ச்சியான வெற்றிகளுடன் வேகத்தை எடுத்தது. அவர்களின் கடைசி போட்டியில், அவர்கள் வங்காளதேசத்தை 127 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர், பின்னர் 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கை எட்டினர். அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானுக்கு லக்கும் கைகொடுத்துள்ளது.
நெதர்லாந்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதால் வாய்ப்பை பயன்படுத்தி வங்கதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர். பாகிஸ்தானில் இப்திகார் அகமது, ஷான் மசூத், முகமது ஹாரிஸ், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், முகமது மற்றும் ஷதாப் கான் போன்ற வீரர்கள் நல்ல பார்மில் இருக்கின்றனர். அதேசமயம் கேப்டன் பாபர் அசாம் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர் பார்முக்கு வரும்பட்சத்தில் ரிஸ்வானுடன் சேர்ந்து நல்ல துவக்கம் தரலாம்.. இன்றைய போட்டி அனல்பறக்கும் என்பதில் சந்தேகமில்லை..
கணிக்கப்பட்ட நியூசிலாந்து :
கேன் வில்லியம்சன் (கே), ஃபின் ஆலன், டெவோன் கான்வே, டி.ஜே.மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், டிரெண்ட் போல்ட், லாக்கி பெர்குசன், இஷ் சோதி, டிம் சவுத்தி
கணிக்கப்பட்ட பாகிஸ்தான் :
பாபர் அசாம்(கே), ஷான் மசூத், ஷதாப் கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், ஹாரிஸ் ரவுஃப், முகமது வாசிம், நசீம் ஷா, எஸ்.அஃப்ரிடி