தமாகா தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மலேரியா, டெங்கு, காலரா, சிக்கன் குனியா, கண் நோய்கள் என பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் கூட்டம் மருத்துவமனைகளில் அலை மோதுகிறது. மேலும் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிகமாக ஆரம்ப சுகாதார நிலையங்களையும், அரசு பொது மருத்துவமனைகளையும் நாடுகின்றனர். எனவே தமிழக அரசு மக்களின் வசதிக்காக நடமாடும் மருத்துவமனைகள், மருத்துவ முகாம்களை அதிக அளவில் ஏற்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.