துருக்கிக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதால் சிரியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது
சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுப்படைக்கு ஆதரவாக ரஷ்யாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கியும் செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக இருபிரிவினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த உள்நாட்டு போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
ஆம், சமீபத்தில் இட்லிப் பகுதியில் சிரியாவுக்கு சொந்தமான போர் விமானத்தை ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் துருக்கி படைகள் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடி கொடுப்பதற்கு சிரியா அரசுப்படை தயாராகி வருகின்றது. பதற்றமான இந்த சூழலில் துருக்கிக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.
ஆம், துருக்கிக்கு மனிதாபிமான உதவிகளுடன், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் வழங்கத் தயாராக இருப்பதாக அந்த பிராந்தியத்திற்கான அமெரிக்க சிறப்பு தூதர் தெரிவித்துள்ளார். இதனால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.