ஐ.நா. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 1948-ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றது. அன்று முதல் தற்போது வரை மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், பணவீக்கம், மின் தடைகள் போன்ற பிரச்சினைகளையும் சமாளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விலையேற்றம், உணவு மற்றும் மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதன் விளைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் தற்போது இலங்கையில் உணவு பற்றாக்குறை மோசமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஐ.நா. கூறியதாவது. இலங்கையில் தற்போது 2 கோடியே 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். அதில் 17 லட்சம் மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. மேலும் தொடர்ச்சியான 2 பருவ கால மோசமான அறுவடை, அன்னிய செலவாணி தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் ஐ.நா. கூறியுள்ளது.