தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வை கடந்த மே மாதம் 21ஆம் தேதி சுமார் 11 லட்சம் பேர் எழுதினர். 5,529 காலி பணியிடங்களுக்கு தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி முதன்மை தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஒரு பணியிடத்துக்கு 10 பேர் என்ற அடிப்படையில் முதல் கட்ட தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களில் ஒரு பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்..