தமிழக நியாய விலை கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மொத்தமுள்ள 6503 காலிப்பணியிடங்களுக்கு இதுவரை 2,29,807 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அத்தோடு நவம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் மாநிலத்தில் விரைவில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் பணிகள் தொய்வின்றி நடைபெறும் விதமாக இந்த காலி பணியிடங்கள் பொங்கல் பண்டிகைக்குள் நிரப்பப்படும் என்று கூட்டுறவு துறை உறுதி அளித்துள்ளது.