செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பிஜேபி ஒரு அரசியல் இயக்கம் என்கின்ற பெயரில் பேரணிகள் நடத்துவதில் எமக்கு எந்த மாறுபாடும் இல்லை. ஆர்எஸ்எஸ்-யின் அரசியல் பிரிவாக இருக்கின்ற பிஜேபி இருக்கும் போது, பிஜேபி சார்பில் பேரணி நடத்தாமல் ”ஆர்.எஸ்.எஸ்” சார்பில் பேரணி நடத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது ? ”ஆர்.எஸ்.எஸ்” பின்னால் இருந்து இயங்குகின்ற ஒரு இயக்கம்.
ஆகவே பிஜேபி இந்த 50 இடங்களில் பேரணி நடத்தி இருந்தால், விசிகவோ மற்ற இயக்கங்களோ எதிர்ப்பு தெரிவித்து இருக்க போவதில்லை. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தான், அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒரு தலைமறைவு இயக்கத்தை போல் இயங்குகின்ற ஒரு இயக்கம்.
ஆதார் அட்டைகளை ஒப்படைத்துவிட்டு, பேரணிகள் நடத்தலாம் என்று சொன்னதால்.. வீதிகளிலே நடத்தாமல் ஒரு வளாகத்திற்குள் நடத்தலாம் என்று சொன்னதால்… அவர்கள் பேரணி நடத்தாமல் பின்வாங்கிக் கொண்டார்கள்.. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாங்கள் இந்த நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறோம். இது ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார்களுக்கு எதிரான நடவடிக்கையே தவிர, இந்து சமூகத்தினருக்கு எதிரான நடவடிக்கை அல்ல என விமர்சனம் செய்தார்.