Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச தரவரிசை பட்டியல்..முதலிடத்தில் நீடித்து வரும் இந்தியா..!!

இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த நிலையிலும்  இன்றுவரை தரவரிசைப் பட்டியலில் தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்து வருகிறது.

நியூஸிலாந்திற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டது  இந்திய கிரிக்கெட் அணி. இதில் நடைபெற்ற 2 போட்டிகளிலும்  டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து விட்டது. அதன் பின் ஒயிட்வாஷ் ஆகியது. இதை தொடர்ந்து, இப்போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டனர்.

இதில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி 2-வது இடம் வகித்தார். இத தொடர்ந்து 3-வது இடத்தில் அதே ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த வீரர் மார்னஸ் லாபஸ்சாக்னே  உள்ளார்.

இப்போட்டியில் பந்து வீச்சில், முதலிடத்தில் ஆஸ்திரேலிய பேட் கம்மின்ஸ்ம் , இரண்டாவது 2-வது இடத்தில் நெயில் வாக்னரும் நீடித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ஆல் ரவுண்டர் பிரிவில், முதலிடத்தில் மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டரும், இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ்ம், மூன்றாவது இடத்தில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் நீடித்து வருகின்றனர்.

கிரிக்கெட் அணிகளின் சர்வதேச தரவரிசையில், இந்திய அணி 3 புள்ளிகளை இழந்து 116 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரை முழுமையாக கைப்பற்றிய நியூஸிலாந்து 110 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

Categories

Tech |