அண்மைகாலமாக சில ப்ரிட்ஜ் வெடிக்கும் நிகழ்வு நடக்கிறது. இதனை தடுக்க நாம் சில வழிமுறைகளை கடைபிடித்து பிரிட்ஜை பராமரிப்பதன் வாயிலாக இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாத்துக்கொள்ளலாம். எனவே ப்ரிட்ஜ் வாயிலாக எவ்வித ஆபத்தும் ஏற்படாமல் தடுக்க நீங்கள் செய்யவேண்டியவை என்னென்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
# சூடான உணவுப்பொருளை கண்ணாடி அலமாரிகளில் வைத்தால் அலமாரி உடைந்து விடும். அதுபோன்று ப்ரிட்ஜில் சூடான பொருட்களை வைக்கக் கூடாது. ஏனெனில் சூடானபொருள் பிரிட்ஜின் வெப்பநிலையை அதிகரிக்கும். அத்துடன் இது கம்ப்ரசரின் மீது ஒரு சுமையை ஏற்படுத்தக் கூடும்.
# ப்ரீசர் மற்றும் ப்ரிட்ஜுக்கு இடையே காற்றை சுழற்ற மற்றும் பிரிட்ஜின் குளிரூட்டும் செயல்பாடுகளுக்கு வென்ட்கள் முக்கியமானவை ஆகும். வென்ட்களை நீங்கள் அடைத்தால் ப்ரிட்ஜில் உறைதல் (அ) அதிக வெப்பமடைதல் மற்றும் மோட்டாரில் கோளாறு ஆகிய பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம்.
# 6 மாதங்களுக்கு ஒரு முறை பிரிட்ஜின் அடிப் பகுதியில் (அ) பின் புறத்தில் மென்மையான ப்ரஷ் போன்ற இணைப்புடன் அமைந்துள்ள கண்டன்சர் காயிலை சுத்தம் செய்யவும். அதனை சுத்தம் செய்யவில்லை எனில் அதில் தூசி, அழுக்கு மற்றும் வெப்பம் உருவாகலாம். பின் இறுதியில் சாதனத்தை சேதப்படுத்தி விடும்.
# பிரிட்ஜின் கைப்பிடிகள் உடைந்து இருந்தாலோ (அ) அது வளைந்து இருந்தாலோ (அல்லது) ப்ரிட்ஜ் கதவில் ஏதேனும் கோளாறு இருந்தாலோ குளிர்ந்த காற்று அதில் இருந்து வெளியேறக்கூடும். இதன் காரணமாக இது போன்ற சிக்கல்களை உடனே சரி செய்துவிட வேண்டும்.