ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ 128யும் , பவுனுக்கு ரூ 1024யும் உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஒட்டுமொத்த உலக பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீட்டாளர்கள் ஆபரண தங்கம் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தான் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கின்றது. மேலும் அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து கொண்டு இருப்பதால் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தநிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம் 1 கிராம் 128 ரூபாய் அதிகரித்து 4,153 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 1,024 ரூபாய் அதிகரித்து 33, 224 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ 1.60 உயர்ந்து ரூ 50.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் இந்த அசுர விலை ஏற்றத்தால் சாமானிய மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.