உலகின் மிக உயரமான கட்டிடம் துபாயில் உள்ள புர்ஜ் கலிப்பா ஆகும். இந்த கட்டிடத்தின் அருகில் உள்ள 35 மாடி கட்டிடத்தில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ வேகமாக கட்டிடத்தின் மேல் பகுதிக்கும் பரவியது.
இதனால் அப்பகுதியில் கரும்புவை சூழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ அதிகாலை 4 மணிக்கு முழுவதுமாக கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.