தமிழ் சினிமாவில் அழகி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தங்கர் பச்சான். இவர் நடிகராக, இயக்குநராக , ஒளிப்பதிவாளராக , ஓவியராக , தயாரிப்பாளராக பன்முகத்திறன் கொண்டவர். தங்கர் பச்சான்ஸஇயக்கத்தில் சேரன் நடித்த ‘சொல்ல மறந்த கதை’ படம் வெளியாகிய 20 ஆண்டுகள் ஆகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டரில் தங்கர் பற்றான் நிகழ்ச்சி பதிவை பதிவிட்டுள்ளார். அதில், சொல்ல மறந்த கதை வெளியான போது கண்ணீர் கசிந்த கண்களோடு மக்கள் திரையரங்கில் இருந்து வெளியேறினார்கள். தங்கள் வீட்டு கதையாகவும், பக்கத்து வீடு நண்பர்களின் கதையாகவும், உறவினர்களின் கதையாகவும் இருந்தது தான் அப்படத்தின் தனிச்சிறப்பு. சிறந்த இயக்குனராக அறியப்பட்ட சேரன் நடிகராக அறிமுகமானார்.
சொல்ல மறந்த கதையின் இன்றைய தலைமுறையினரும் கொண்டாடி மகிழ்கிறார்கள். அதனை தொடர்ந்து நமது மண் சார்ந்த மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்ட, கலாச்சாரம் மற்றும் உறவு நிலைகளை உள்ளடக்கிய திரைப்படமாக இருந்ததால் தான் அது மக்களின் மனதில் ஆழமாக குடிகொண்டு விட்டது. இதுபோன்ற அசல் தமிழ் திரைப்படங்களை தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு படைப்பாளராக மக்கள் எதிர்பார்க்கும் இது போன்ற திரைப்படத்தை உருவாகும் எண்ணமும் ஊந்தலும் என்னை மேலும் ஆட்கொண்டு விட்டது. நான் தற்பொது உருவாகி கொண்டு இருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் மூலம் உங்கள் அனைவரின் நம்பிக்கையும் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.