Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல்முறையாக….. ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர் விருதை வென்றார் கோலி…. ரசிகர்கள் மகிழ்ச்சி.!!

ஐசிசி மாதாந்திர கிரிக்கெட் வீரர் விருது இந்த முறை விராட் கோலிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐசிசி மாதம் தோறும் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி  அவர்களை கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருது  இந்த முறை இந்திய நட்சத்திர கிரிக்கெட் விராட் கோலிக்கு  வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.. தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா மற்றும் இந்திய வீரர்  விராட் கோலி ஆகிய 3 பேரின் பெயர்களும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் முதன்முறையாக மாதாந்திர சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் கோலி.. கடந்த சில காலங்களாக பேட்டிங்கில் தடுமாற்றத்துடன் இருந்து வந்த கோலி பல விமர்சனங்களை சந்தித்தார்..

கோலி பார்மில் இல்லாத கோலியை அணியில் இருந்து தூக்குங்கள் என்றெல்லாம்  கருத்துக்கள் வந்தன.. ஆனால் அடிபட்ட சிங்கத்தோடமூச்சு காற்று அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும் என்பது போல நடந்து முடிந்த ஆசிய கோப்பையோடு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கோலி. ஆசிய கோப்பையின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டி20யில் முதல் சதத்தை பதிவு செய்து பார்முக்கு வந்தார் கோலி.

கோலி அதிலிருந்து அப்படியே தனது பார்மை கண்டினியூ செய்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் சூப்பர் 12 போட்டியில் தனி ஒரு ஆளாக கடைசிவரை எடுத்துச் சென்று அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அந்த போட்டியை அவ்வளவு எளிதில் ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு விராட் கோலி அந்த போட்டியில் அதிரடியில் மிரட்டி இருப்பார். விராட் கோலியின் அந்த ஒரு இன்னிங்க்ஸை பார்த்து முன்னாள் ஜாம்பவான் சச்சின் உட்பட பலரும் புகழ்ந்து பாராட்டியிருந்தார்கள்..

விராட் கோலி பார்முக்கு வந்தது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.. அடுத்து வரும் நவ.,10 ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியிலும் விராட் கோலி ஜொலிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.. விராட் கோலி மொத்தம் 10 ஐசிசி விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |