Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல் முறையாக அதிகாரத்தை பயன்படுத்திய ஸ்டாலின்…. நிர்வாகிகளை நியமித்தார் …..!!

திமுகவின் பொதுச்செயலாளர் அதிகாரத்தை திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல்முறையாக பயன்படுத்தியுள்ளார்.

க.அன்பழகன் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டிருந்த க.அன்பழகன் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார்.

இதனால் பொதுச்செயலாளர் அதிகாரத்தை முக.ஸ்டாலினுக்கு வழங்கும் வகையில் 2019ஆம் ஆண்டு நடந்த திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து தனக்கு தரப்பட்ட பொதுச்செயலர் அதிகாரத்தை முதல் முறையாக பயன்படுத்தி நிர்வாகிகளை நியமித்துள்ளார். மு க ஸ்டாலின் பொதுச் செயலாளர் என்ற முறையில் தூத்துக்குடி நிர்வாகிகளை நியமித்தது தொடர்பாக முரசொலியில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |