Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. ஜெயிலர் படத்தில் 7 சண்டை காட்சிகளா?…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் திசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. அது மட்டும் இல்லாமல் அவருக்கு 70 வயது ஆகிவிட்டதால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் குறைவாகவே இடம்பெறும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் மொத்தம் 7 சண்டை காட்சிகள் உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சண்டை பயிற்சிகளில் பணியாற்றும் ஸ்டண்ட் சிவா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியது, இந்த படத்தில் மாஸான ரகளையான 7 சண்டை காட்சிகள் உள்ளது. அவை அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டது. இது குறித்த வீடியோ ஒன்று ரஜினி ரசிகர்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதன்படி ஜெயிலர் படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஆக்ஷன் விருந்தாக இருக்க போகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |