தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (8.11.22) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி
மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர்நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன்மாநகர், மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
நல்லூர்
இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நல்லூர், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூர், வைரம்பாளையம், கோலாரம், ராமதேவம், நடந்தை, கோதூர், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூர், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
தஞ்சாவூர்
நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மின் பாதைகள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது இதனால், அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மின்பாதையிலிருந்து மின்விநியோகம் பெறும் மேம்பாலம் சிவாஜி நகர் சீதா நகர் சீனிவாசபுரம் ராஜன் சாலை தென்றல் நகர் கிரி சாலை காமராஜர் சாலை ஆபிரகாம் பண்டிதர் நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. மேல வீதி தெற்கு வீதி பெரிய கோவில் சாலை மேல அலங்கம் ஆகிய பகுதிகளிலும் வண்டி காரதெரு மின் பாதையில் மின்விநியோகம் பெறும் ரயிலடி சாந்த பிள்ளைகேட் மகர் நோன்பு சாவடி வண்டிக்கார தெரு தொல்காப்பியர் சதுக்கம் வெள்ளை பிள்ளையார் கோவில் சேவியர் நகர், சோழன் நகர ஆகிய பகுதிகளிலும் சர்க்யூட் ஹவுஸ் மின் பாதையிலிருந்து மின்விநியோகம் பெறும் சாலை திவான் நகர் சின்னையா பாளையம் மிஷன் சர்ச் சாலை ஜோதி நகர் ஆடக்கார தெரு ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருப்பூர்
உடுமலை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையம் பகுதிக்குட்பட்ட பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம் புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கபட்டி சுங்கார மடக்கு, குடிமங்கலம் ஒரு பகுதி ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
அன்னவாசல், இலுப்பூர், பாக்குடி துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர், ராப்பூசல், அன்னவாசல் பேருராட்சி பகுதி, காலாடிபட்டி, செங்கப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, தச்சம்பட்டி, புதூர், வெள்ளாஞ்சார், கிளிக்குடி, சித்தன்னவாசல், பிராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.