செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஸ்டாலின் அவர்களும் அமைச்சர்களின் பேச்சுக்கு, அறிவுரை சொல்றாரு. என்னால நிம்மதியா தூங்க முடியலன்னு, நீங்க நிம்மதியா தூங்காம இருக்கறதுக்கு யார் காரணம் ? உங்க ஆட்சியில் மக்கள் நிம்மதியா தூங்க முடியல. மக்கள் கேள்வி கேட்குறாங்க. உங்கள் அமைச்சர்கள் சரிவர பணியாற்றல.
மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தின டாக்டர் கிருஷ்ணசாமி… வாகனத்தில் அதிகமான வாகனத்தில் போனாரு… மின் கட்டண உயர்வு பற்றி அவர் பேசுகிறார். அதற்காக உடனே அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். பெண்களை இழிவு படுத்தி பேசி இருக்கிறார். அவங்க கட்சி பேச்சாளர் பெண்களை ரொம்ப தரக்குறைவா பேசி இருக்காங்க.
அதற்காக அண்ணாமலை ஒரு போராட்டம் நடத்துறாரு, அதற்கு அவர்கள் அனுமதி கொடுத்தால் என்ன ? உடனே அண்ணாமலை கைது. கோவையிலே குண்டுவெடிப்பு சம்பவம். அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து இந்து மக்கள் கட்சி போராட்டம் நடந்தது அர்ஜுன் சம்பத் கைது.
எடப்பாடி பழனிசாமி கைது, எங்களையெல்லாம் கைது பண்ணி, இந்த எதிர்க்கட்சிகளை நசுக்கி, ஒடுக்கி… ஆனால் திருமாவளவனுக்கு அனுமதி, கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கு அனுமதி, நாம் தமிழருக்கு அனுமதி. இது எந்த வகையிலே நியாயம்? என கேள்வி எழுப்பினார்.