கமலுக்கு ரசிகர் ஒருவர் அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகர், நடன ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், கதை திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், ஒப்பனை கலைஞர், பாடல் ஆசிரியர், இலக்கியவாதி, தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மைகளை கொண்டுள்ளார் கமல். குழந்தை நட்சத்திரம், சிறந்த நடிகர் என கமல்ஹாசன் இதுவரை நான்கு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த படத்திற்கு தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும் தமிழக அரசு திரைப்பட விருதுகள் நான்கும் ஆந்திர அரசின் நந்தி விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள் என பல இந்திய விருதுகளை பெற்றிருக்கின்றார். மேலும் இவர் உயரிய விருதுகளான பத்மபூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளும் வாங்கியுள்ளார்.
பல விருதுகளுக்கு சொந்தக்காரரான கமல்ஹாசன் இன்று தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இவருக்கு பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல்ஹாசன் சார் என கூறியதோடு 1986இல் சிங்கப்பூரில் கமலின் முந்தைய விக்ரம் திரைப்படத்தை பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தற்போது விழுப்புரத்தில் இருந்து விக்ரம் படத்தை பார்த்த போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Happy Birthday #KamalHassan Sir
Once a fan is always a fan of @ikamalhaasan Sir. Wish you success in all you touch. pic.twitter.com/vzi9WIrlLs— Priyesh (@tkpriyesh) November 7, 2022