திடீரென சாலையில் கம்பிகள் சாய்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதேபோல் செம்மொழி சாலையில் ரயில் பணிக்காக தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலை நடுவில் சுமார் 60 அடி உயரத்துக்கு தூண்கள் அமைப்பதற்காக கம்பிகள் கட்டப்பட்டு இருந்தது. அந்த கம்பிகள் திடீரென இன்று சாலையில் சாய்ந்து விழுந்துள்ளது. இந்நிலையில் அந்த நேரத்தில் சாலையில் வாகனங்கள் எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போக்குவரத்து துணை கமிஷனர் குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஸ்ரீதர், ஆய்வாளர் ஜெயவேல், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் விழுந்த கம்பிகளை 4 மணி நேரம் போராடி மீட்டுள்ளனர்.