Categories
அரசியல் தேசிய செய்திகள்

BREAKING: காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை முடக்க உத்தரவு….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த நடைபயணம் கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா என்று தற்போது சென்று கொண்டிருக்கிறது. இதற்கிட்டையில் ராகுல் காந்தி நடை பயணம் குறித்த வீடியோக்கள் கேஜிஎப் 2 பட மியூசிக் மூலம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய ஒற்றுமை பயணம் ஆகிய இரு ட்விட்டர் கணக்குகளையும் முடக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கேஜிஎப் 2 படத்தின் இசையை ராகுல் காந்தியின் வீடியோவுக்கு அனுமதி இன்றி பயன்படுத்தியதாக எம்ஆர்டி இசை நிறுவனம் தொடர்ந்த காப்புரிமை வழக்கில் ட்விட்டர் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |