Categories
தேசிய செய்திகள்

இனி குறைந்த விலையில் அமேசான் வீடியோ…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

அமேசான் நிறுவனம் தங்களுடைய பிரைம் சேவைகளை வருடத்திற்கு ரூ.1499 என வழங்கி வருகிறது. இந்நிலையில் மொபைல் போனில் பிரைம் வீடியோ பார்ப்பவர்களுக்காக புதியதாக ரூ.599 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் டிவியிலோ, கம்ப்யூட்டரிலோ அமேசான் வீடியோக்களை பார்க்க முடியாது. ஆனால் மொபைல் போனில் படம் பார்க்கும் பலருக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

அமேசான் பிரைம் வீடியோகளை செல்போனில் மட்டும் பார்க்ககூடிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதால் இந்தியாவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டு சந்தாகட்டணம் குறைந்த அளவில் உள்ளதால் அதிகமானவர்களை எளிதில் கவரமுடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.

Categories

Tech |