Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“2 வருடங்களாக பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்”…. நர்சரி உரிமையாளர் மீது பாய்ந்த குண்டாஸ்…!!!!!

14 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாகிய நர்சரி உரிமையாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியை சேர்ந்த சேகர் என்பவர் ஆட்சியர் அலுவலகம் பகுதியில் நர்சரி நடத்தி வருகின்றார். இவரின் வீட்டில் அருகே வசிக்கும் தம்பதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மகள் இருக்கின்றார். இவர்களால் மாணவியை பள்ளிக்கு அழைத்து செல்ல முடியாத நேரங்களில் சேகர் தனது காரில் மாணவியை பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார்.

ஆனால் ஒரு கட்டத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றார். இந்நிலையில் மாணவியின் உடல் நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதால் பெற்றோர்கள் சந்தேகம் அடைந்து மாணவியை மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். பின் மருத்துவ பரிசோதனை செய்ததில் மாணவி 8 மாத கர்மமாக இருந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார்கள். போலீசாரின் விசாரணையில் சேகர் இரண்டு வருடங்களுக்கு மேலாக மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது வெளியில் சொல்லக்கூடாது என மிரட்டி வந்தது தெரிந்தது. இதனால் மாணவி பயந்து யாரிடமோ சொல்லாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தார்கள். தற்போது சேகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |