ட்விட்டர் நிறுவனம் பணியிலிருந்து நீக்கிய பணியாளர்களில் சில பேரை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்கின், கைகளுக்கு சென்ற பிறகு அதில் அதிரடியாக பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் உலகம் முழுக்க உள்ள 7500 பணியாளர்களில் பாதி பேரை கடந்த நான்காம் தேதி அன்று பணி நீக்கம் செய்து விட்டனர்.
இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களில் சில பேரை மட்டும் மீண்டும் பணிக்கு வருமாறு நிறுவனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது நீக்கப்பட்ட பணியாளர்கள் சில பேரிடம் தவறுதலாக பணி நீக்கம் செய்ததாகவும், மீண்டும் வேலைக்கு வாருங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.