தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடித்துள்ள யசோதா திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு நடிகை சமந்தா சகுந்தலம் மற்றும் குஷி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் Myositis auto immune என்று அரிய வகை சரும நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நடிகை சமந்தா விரைவில் குணமடைந்து வரவேண்டும் என ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை சமந்தா மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் தன்னுடைய புதிய புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் சமந்தா கருப்பு நிற உடை அணிந்து கண்களில் கண்ணாடி போட்டு மிகவும் கவலையான முகத்தில் இருப்பது போன்று இருக்கிறது. மேலும் இந்த புகைப்படமானது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.