தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி தன் முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்தார். அதன்பிறகு கார்த்திக் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் முன்னணி நடிகராக மாறினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் நடிகை ராசி கண்ணா, ரெஜிஷா விஜயன் மற்றும் லைலா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். சர்தார் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பாளர் பிஎஸ் மித்ரனுக்கு டொயோட்டா கார் ஒன்றினை பரிசாக கொடுத்தது. இந்நிலையில் சர்தார் திரைப்படம் தற்போது 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவலை நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் இணையதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.