Categories
உலக செய்திகள்

இம்ரான்கான் மீதான கொலை முயற்சி… 3 பேரும் உடனடியாக பதவி விலக வேண்டும்… தயக்கம் காட்டும் போலீசார்…??

 கொலை முயற்சியில் பஞ்சாப் மாகாண போலீசார் தயக்கம் காட்டி வருவதாக இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த மூன்றாம் தேதி பஞ்சாப் மாகாணம் பாஜிராபாத் நகரில் அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரது வலது காலில் குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் இம்ரான் கான் நேற்று மருத்துவமனையில் இருந்தபடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர் பேசியதாவது, என் மீதான இந்த கொலை முயற்சிக்கு பிரதமர் ஷபாஷ் ஷெரீப், உள்துறை மந்திரி ராணா சனாவுல்லா மற்றும் ராணுவ உளவு பிரிவு தலைவர் ஜெனரல் பைசல் போன்றோர் தான் காரணம் அதனால் புகாரில் அவர்களது பெயரை குறிப்பிட எனக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் பஞ்சாப் மாகாண போலீசார் ராணுவ அதிகாரியின் பெயர் புகாரில் இடம் பெற்று இருப்பதால் புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்ய தயக்கம் காட்டி வருகின்றார்கள்.

மேலும் பிரதமர் மற்றும் உள்துறை மந்திரிக்கு எதிராக கூட அவர்கள் வழக்கு பதிவு செய்ய தயாராக இருக்கின்றார்கள். ஆனால் புகாரில் ராணுவ அதிகாரியின் பெயரை நீக்கும் வரை வழக்கு பதிவு செய்ய முடியாது என தெரிவித்து இருக்கின்றனர். அதனால் பாரபட்சம் பார்க்காமல் நியாயமான விசாரணையை நடத்த வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ள மூன்று பேரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |