Categories
தேசிய செய்திகள்

மக்களே!… உஷார்…. டுவிட்டரில் ப்ளூ டிக் வசதியை நிரந்தரமாக பெற 2 டாலர்”….. நூதன முறையில் மோசடி….!!!!!!

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மாஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் twitter நிறுவனத்தை வாங்கியதில் இருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்வது முக்கிய அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்வது போன்ற அதிரடி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு முக்கிய பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ப்ளூ டிக் வசதியை அனைத்து மக்களும் பயன்படுத்தலாம் என்று கூறி அதற்கு மாத கட்டணமாக இந்திய ரூபாய் மதிப்பில் 662 வசூலிக்கப்படும் என்று எலான்‌ மஸ்க் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், முக்கிய பிரபலங்களை அடையாளம் காண்பது கடினமானதாக மாறிவிடும் என்றும் கூறி வருகிறார்கள்.

இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத மஸ்க் புகார் தெரிவிப்பவர்கள் தாராளமாக தெரிவிக்கலாம். ஆனால் அதற்கும் மாதம் 8 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் டுவிட்டரில் உள்ள ப்ளு டிக் பெயரை பயன்படுத்தி தற்போது ஒரு கும்பல் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது. அதாவது நிரந்தரமாக ப்ளூ டிக் வசதியை பெறுவதற்கு 2 டாலர்கள் உடனடியாக செல்போனிலிருந்து செலுத்தினால் போதுமானது என்று குறுந்தகவல் செல்போனுக்கு வருகிறதாம். இந்த குறுந்தகவல் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்றது.

எனவே யாராவது ப்ளூ டிக் வசதியை பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஏதாவது லிங்க் அனுப்பினால் அதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நீங்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய மொத்த விபரமும் அந்த மோசடி கும்பல் கையில் சிக்கி வங்கி கணக்கில் இருந்தும் பணத்தை அபேஸ் செய்து விடுவார்கள். மேலும் இதுபோன்ற குறுந்தகவல்கள் ஏதேனும் வந்தால் உடனடியாக காவல்நிலையத்தை அணுகுவதோடு பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |