செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் சொன்னதை நீங்க திரும்ப பார்த்தீங்கன்னா தெரியும். அம்மாவின் தொண்டர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள் ஓர் அணியில் திரண்டு திமுக அணியை எதிர்க்க வேண்டும், திமுக அணியை வீழ்த்த வேண்டும் என்று சொன்னேன். இப்படி சொல்றப்ப எடப்பாடி சொன்ன ”மெகா கூட்டணி” அப்படின்னு சொல்றவங்க, அடுத்தவங்கள தரம் தாழ்த்தி பேசுறவங்க, இவங்க எல்லாம் ஒன்னு புரிஞ்சுக்கணும்…
திமுகவை வீழ்த்தனும்னா அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஒன்னா போகணும்னு சொன்னேன். நேத்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைக்காட்சிக்கு சொன்னதுல இருந்து என்ன தெரியுது ? நான் அம்மாவின் தொண்டர் இல்லைங்கிறது காமிக்கிறார். என்றைக்கும் கால் சதவீதம் இல்லை, அரை சதவீதம், அரைக்கால் சதவீதம் கூட நான் பழனிச்சாமி கூட போவேன்னு எங்கேயும் சொன்னதில்லை.
மூன்று நாட்களுக்கு முன்பு கூட ஊடக நண்பர்கள் கேட்டாங்க, நீங்க அண்ணா திமுக கூட்டணியில் போவீங்களா என்று திரும்பத் திரும்ப கேட்கிறீங்க ? இன்னைக்கு கேட்குறீங்க. அண்ணா திமுக என்கிறது ஒரு செயல்பாடாக கட்சியாக இருக்கின்றது. நான் சொல்றது உண்மைதானே, ஒரு கட்சி பெரிய கட்சியோ – சின்ன கட்சியோ, நாளைக்கே ஒரு இடைத்தேர்தல் வருது.
ஒரு கட்சி என்றால், அந்த கட்சியினுடைய வேட்பாளர்களுக்கு ஏற்கனவே சின்னம் உள்ள கட்சிக்கு சின்னம் கொடுக்கக்கூடிய இடத்துல அந்த கட்சியில் யார் இருக்கா ? இன்னும் சொல்லப்போனால் திரு ரவீந்திரன் துரைசாமி அவர்களுடைய வார்த்தையில் சொல்லணும்னா… அண்ணா திமுக இன்னைக்கு தலை இல்லாத முண்டமா ? இருக்கு என விமர்சித்தார்.