தலைநகர் டெல்லியில் காற்று மாசு எப்போதுமே அதிகமாக இருக்கும் என்பதை பலரும் அறிந்திருப்போம். தற்போது டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான பிரிவில் இருப்பதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் காற்றில் தரம் கடுமை என்ற பிரிவில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக இன்று காற்று மாசு மிகவும் மோசம் பிரிவில் இருந்து வருகின்றது. காற்றின் தரம் 326 புள்ளிகளாக உள்ளது. இதனால் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் டிரக்குகள் நுழைவதற்கு, பள்ளிகள் செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. பிஎஸ்3 பெட்ரோல் வகை கார்கள் மற்றும் பிஎஸ் 4 டீசல் வகை வாகனங்களுக்கான தடை நீடிக்கின்றது. காற்று மாசு தொடர்ந்து மோசமான பிரிவில் இருக்கும் நிலையில் பள்ளிகளுக்கான கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.