Categories
அரசியல் மாநில செய்திகள்

என்கிட்ட ப்ரூப் இருக்கு…! ரெடியான காயத்திரி ரகுராம்… நோஸ்கட் செய்த அண்ணாமலை.. செம பரபரப்பில் கமலாலயம்…!!

பாஜகவில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கம் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் பாஜகவின் இந்த நடவடிக்கை குறித்து பேசுகையில், என்னை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு எந்த விளக்கமும் கேட்கல. ஏன்னா என்னிடம் பெரிய ப்ரூப் இருக்கு. இதனை பாஜக தலைமையிடம் கொடுக்க  ரெடியா இருக்கேன். இந்த கும்பல் இப்போது மட்டும் இல்லை. இதுக்கு முன்னாடியும் என்ன டார்கெட் பண்ணி இருக்காங்க, ட்ரோல்  பண்ணி இருக்காங்க.

செல்வகுமார் என்பவர் இப்போது மூணு மாசத்துக்கு முன்னாடி போஸ்டிங் வாங்கிட்டு வந்து இருக்காரு. இதுக்கு முன்னாடி வெறும் பாஜகவின் ஆதரவாளராக தான் இருந்தாரு. இப்போ மெம்பர் ஆகி,  ஒரு போஸ்டிங் வாங்கி இருக்காரு. இவர் ஆரம்பத்தில் இருந்து எனக்கு தொல்லை கொடுத்துட்டு இருக்காரு. அதுக்கு நான் எதிர்ப்பு கொடுத்து இருந்தேன்.

அவர் இன்டஸ்ட்ரியல் பிரிவின் துணை தலைவராக இருக்காரு. அந்த மாதிரி ஒரு நபரை நான் திருப்பி தாக்கி பேசினது தப்பு அப்படின்னு சொன்னது என்னால ஏத்துக்க முடியாது. ஏன்னா என்னை பொறுத்தவரைக்கும் சுய பாதுகாப்பு தான் எல்லா லேடிஸ்க்கும் சொல்லி கொடுக்கணுமே தவிர,  நீங்க பேசக்கூடாது,  உங்களுக்கு அந்த உரிமை இல்லைன்னு சொல்றதுக்கு யாருக்கும் உரிமை கிடையாது.

என்ன பொறுத்த வரைக்கும் அண்ணாமலை ஜீ என்னைக்கு ஊருக்கு வந்தாருன்னு தெரியல. காலையில் தான் வந்தாரு. வந்த உடனே காலையில் போன்ல வந்து,  சொன்ன ஒரே ஒரு விஷயம். நீங்க சஸ்பெண்ட் பண்ணபடுறீங்க என சொன்னாங்க. அப்போது நான் ஓகே பைன் என்று என்ன காரணம் அப்படின்னு கேட்கும் போது ? என்னை பதில் சொல்லவே விடல.இல்லை இல்ல உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டு, டக்குனு போன வச்சுட்டாரு. அதுக்காக எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல என தெரிவித்தார்.

Categories

Tech |