Categories
தேசிய செய்திகள்

இன்று ஓய்வு பெறுகிறார் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி… சிறப்பு அமர்வு நடவடிக்கைகள் இணையத்தில் நேரடி ஒளிபரப்பு…!!!!!

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி யுயு லலித் இன்று ஓய்வு பெறுகின்றார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில் யு.யு.லலித்தின் பனிக்காலம் நாளையுடன் (நவ.8) நிறைவடைய உள்ளது. ஆனால் நாளை குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று கடைசி நாளாக யு.யு.லலித் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்ற உள்ளார்.

இதனை முன்னிட்டு அவர் தலைமையில் கூடும் சிறப்பு அமர்வின் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இந்த அமர்வில் நீதிபதிகள் டி.ஓய்.சந்திர சூட், பெலா, எம் திரிவேதி போன்றோர் பங்கேற்க இருக்கின்றனர். இதனை அடுத்து சுப்ரீம் கோர்ட்டின் புதிய நீதிபதியாக டி.ஓய் சந்திர சூட் பதவியேற்க இருக்கின்றார். அவர் நவம்பர் ஒன்பதாம் தேதி நாட்டின் 50 வது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக வருகிற 9ம் தேதி பதவி ஏற்க இருக்கின்றார்.

Categories

Tech |