Categories
தேசிய செய்திகள்

மகளை காலேஜில் சேர்த்துவிட்டு…. மனம் உருகி ஆனந்த கண்ணீர் சிந்திய தந்தை…. வைரல் வீடியோ…..!!!!

தலைநகர் டெல்லியை சேர்ந்த ஒரு நபர் தன் மகளை காலேஜில் சேர்த்து விட்டு திரும்பிய போது ஆனந்த கண்ணீர் சிந்திய வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியை சேர்ந்த பிரிக்‌ஷா என்பவர் புது கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார். கல்லூரியில் சேர்வதற்காக தன் தாய் மற்றும் தந்தையுடன் பிரிக்‌ஷா ஆட்டோவில் சென்று உள்ளார். இந்நிலையில் தன் மகளை கல்லூரியில் விடுவதை எண்ணி பிரிக்‌ஷாவின் தந்தை கண்ணீர் சிந்துகிறார். அத்துடன் பிரிக்‌ஷாவின் தந்தையுடன் சேர்ந்து தாயும் மனம் கலங்கிய நிலையில், பிறகு தன் கணவரை சமாதனபடுத்துகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Preksha (@pre.xsha)

இதனை வீடியோவாக எடுத்த பிரிக்‌ஷா தன் சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது வீடியோவுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது. அத்துடன் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |