தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், ம.நீ.ம கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்! என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை ட்விட்டரில் டேக் செய்த கமல்ஹாசன் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், உங்கள் வாழ்த்துக்களுக்கும், தோழமை பாராட்டும் மனதிற்கும் என்றென்றும் நன்றியுடன் கமல்ஹாசன்.” என்று பதிவிட்டுள்ளார்.
தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், @maiamofficial கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.
கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம்!
— M.K.Stalin (@mkstalin) November 7, 2022
உங்கள் வாழ்த்துக்களுக்கும், தோழமை பாராட்டும் மனதிற்கும் என்றென்றும் நன்றியுடன் கமல்ஹாசன். https://t.co/kdZrpTrEwH
— Kamal Haasan (@ikamalhaasan) November 7, 2022