உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரபல twitter நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரை வாங்கிய உடனே முதலில் ட்விட்டரின் முக்கிய அதிகாரிகளை நீக்கினார். பின்பு ஆலோசனைக் குழுவும் நீக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புளூ டிக் சலுகை பெற்றவர்களுக்கு கட்டணம் நிர்ணயித்ததுடன் twitter வார்த்தை வரம்புகளையும் அதிகரித்தார்.
இந்த நிலையில் சரிபாதி அளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்த ட்விட்டர், தற்போது அவர்களில் வெகுசிலரை திரும்ப பணிக்கு அழைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் நடந்ததில் தவறுதலாக அவர்களும் நீக்கப்பட்டதாகக்கூறி, பணிக்கு திரும்ப அழைத்திருக்கிறதாம் ட்விட்டர். நீக்கப்பட்டவர், திரும்ப அழைக்கப்பட்டவர்கள் பற்றிய உறுதியான விவரத்தை ட்விட்டர் வெளியிடவில்லை.