Categories
மாநில செய்திகள்

“சென்னை-மைசூரு”…. தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் கிளம்பியாச்சு….. செம ஹேப்பியில் பயணிகள்….!!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் என்று சொல்லப்படும் வந்தே பாரத் ரயில் சேவையானது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்களை சென்னையில் உள்ள ஐசிஎஃப்எல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வருகிற 11-ம் தேதி சென்னையில் இருந்து மைசூர் வரை தொடங்குகிறது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இன்று காலை சென்னையில் இருந்து கிளம்பிய ரயில் இரவு மீண்டும் சென்னைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில் சேவையானது புதன்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இயக்கப்படும். இந்த ரயில் காலை 5:50 மணி அளவில் சென்னையிலிருந்து கிளம்பி மதியம் 12:30 மணி அளவில் மைசூரை சென்றடையும். மறு மார்க்கத்தில் மைசூரில் இருந்து மதியம் 1:30 மணியளவில் கிளம்பும் ரயில் இரவு 7:30 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் வேறு எந்த பகுதிகளிலும் நின்று செல்லாது. மேலும் இந்த ரயிலானது 497 கிலோ மீட்டர் தூரத்தை 76 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |