Categories
சினிமா

பங்கம் செய்த ஆண்டவர்…. பிக்பாஸ் வீட்டை வெளியேறிய ஷெரீனா…. இது வேற லெவல் அடி…..!!!

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக செல்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,சாந்தி மற்றும் அசல் கோளாறு ஆகியோர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்தனர். அவ்வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் செரினா எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த இவர் சக போட்டியாளர்களிடம் எப்போதும் மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் பேசி வந்ததால் தமிழ் பேச வேண்டும் என பலமுறை கமல்ஹாசன் எச்சரித்தும் எந்த பலனும் இல்லை. இந்த வார எலிமினேட் யார் என்பதை மலையாளத்தில் எழுதிய கார்டை கமல்ஹாசன் காண்பித்தார். இதனைப் பார்த்த ஹவுஸ் மேட்டுகள் ஷாக் ஆகினர்.ஷெரினா மலையாளத்திலேயே பேசி வந்ததால் அவருக்கு புரிய வேண்டும் என்பதற்காக மலையாளத்தில் பொறிக்கப்பட்ட கார்டு கமல்ஹாசனால் காட்டப்பட்டது.

Categories

Tech |