தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நடிகர் கமல்ஹாசன் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான நடிகராக கருதப்படுகிறார். கமல்ஹாசன் தனக்கு 6 வயது இருக்கும் போது களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதியின் தங்க பதக்கம் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த 7 திரைப்படங்கள் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அகாடமி விருது பெற்றது.
இந்த விருதை இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதோடு இந்தியாவின் சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் கமல்ஹாசன் பெயர் 2-வது இடத்தில் இருக்கிறது. கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான ஹே ராம் மற்றும் விருமாண்டி போன்ற பல படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் கமல்ஹாசன் மொத்தம் 116 விருதுகள் மற்றும் கௌரவங் =களை வாங்கியுள்ளார். இந்த விருதுகள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம். அதன்படி,
1. ஆனந்த விகடன் சினிமா விருதுகள் – 3
2. ஏசியாநெட் திரைப்பட விருதுகள் – 3
3. பொங்கல் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருதுகள் – 2
4. சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் – 7
5. சிவில் மரியாதைகள் – 3
6. CNN IBN விருதுகள் – 1
7. FICCI விருதுகள் – 2
8. திரைப்பட ரசிகர்கள் சங்க விருதுகள் -2
9. ஃபிலிம் பேர் விருதுகள் – 2
10. தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் – 17
11. அரசு கௌரவ விருதுகள் – 6
12. கௌரவ டாக்டர் பட்டம் – 2
13. சர்வதேச திரைப்பட விழா விருதுகள் – 9
14. நந்தி விருதுகள் – 3
15. தேசிய திரைப்பட விருதுகள் – 4
16. ராஷ்டிரபதி விருதுகள் – 1
17. தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் விருதுகள் – 2
18. ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள் – 1
19. பிரெஞ்சு திரைப்பட சங்க விருதுகள் – 1
20. தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் – 9
21. விஜய் விருதுகள் – 8
22. வி. சாந்தாராம் விருதுகள் – 4
23. ஜீ சினி விருதுகள் – 2
24. எம்ஜிஆர்-சிவாஜி அகாடமி விருதுகள் – 1
25. திறமையான தோழர் விருது – 1
26. மற்ற மரியாதைகள் – 22