சென்னையில் குடிநீர் வாரியத்தின் சார்பாக மழைநீர் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது.
தமிழ்நாட்டில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்காக 57 நீர் உறிஞ்சும் வாகனங்கள், கழிவுநீர் செல்லக்கூடிய பிரதான சாலைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய 162 ஜென்ராடிங் எந்திரங்கள் உள்ளிட்டவை மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை அகற்றுவதற்காக 282 ஆட்டோக்கள் பயன்படுத்தப்படுகின்றது. இதுபோல மழை நீர் மற்றும் கழிவு நீர் அகற்றுவதற்காக 501 கழிவுநீர் எந்திர வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றது. பிரதான குழாய்களில் தூர்வாரும் பணியானது சென்ற மூன்று மாதமாக நடந்து வந்த நிலையில் தற்போது சரி செய்யப்பட்டு உள்ளது. தற்போது பருவமழை என்பதால் 750 மில்லியன் லிட்டர் வரையிலான கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுகின்றது. இதற்காக 2000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளார்கள்.