தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சென்னை மாத்தூரில் இன்று 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். அத்துடன் 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கியுள்ளார். இந்த நிலையில் மணமக்களுக்கு நடிகர் விஷால் தாலி எடுத்து கொடுத்துள்ளார். அதன் பின் 11 திருமண தம்பதிகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷால் நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
இதற்கிடையே அண்மையில் காசிக்கு சென்று வந்த விஷால் காசியை புதுப்பித்து சிறப்பாக மாற்றியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி என twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு பிரதமர் மோடி காசியில் உங்களுக்கு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என பதில் அளித்துள்ளார். இந்த நிலையில் இது பற்றி விஷாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் அதற்கு பதில் அளித்த விஷால் தாஜ்மஹாலை பார்க்கும்போது ஷாஜகானை நினைத்து நாம் வியப்பது போல காசிநகர் பார்த்தபோது பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தோன்றியது. அதன் காரணமாகவே ஒரு சாதாரண குடிமகனாக தன் மனதில் தோன்றியதை பிரதமரிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறியதில் அரசியல் எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளார்.