Categories
உலக செய்திகள்

இரவு விடுதியில் திடீர் தீ விபத்து…. 13 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!!!

ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவிற்கு அருகில் கோஸ்ட்ரோமா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் நேற்று மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் அந்த விடுதியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவி விடுதி முழுவதும் புகைமண்டலமானது. இதனால் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் கடும் சிரமப்பட்டனர்.

இது குறித்து உடனடியாக மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் மீட்டுக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பற்றி எழுந்த கட்டிடத்தில் இருந்து 250 பேரை உயிருடனும் 13 பேரை பிணமாகவும் மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இரவு விடுதியில் எவ்வாறு தீ ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் இரண்டு பேர் ரஷ்ய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |