Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் குடிநீரின் தரம் எப்படி இருக்கிறது?….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அரசும் பல தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை முழுவதும் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.மேலும் குடிநீர் மற்றும் கழிவு நீர் தொடர்பான புகார்களுக்கு 1916 & 04445674567  என்ற எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |